ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

Published:

பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பேச்சுலர்களுக்கும் வீட்டில் மாவு அரைக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். வயது நிறைந்தவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் அனைவருக்கும் இந்த மாவு நல்லாயிருக்கும். அப்படிப்பட்ட இன்ஸ்டன்ட் இட்லி மாவு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இட்லி அரிசி – 4 கப்,
உளுந்தம் பருப்பு – 1 கப்,
ஜவ்வரிசி – 1/4 கப்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-

முதலில் இதை செய்வதற்கு ஒரு மிக்ஸிங் பௌல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் 4 கப் அளவுக்கு இட்லி அரிசி எடுத்து கொள்ள வேண்டும். கப்பு இல்லை என்றால் டம்ளரில் கூட நீங்க அளந்து எடுத்துக் கொள்ளலாம். இட்லி அரிசியில் கலந்து ரெடி பண்ணும் போதுதான் இட்லி நல்ல பஞ்சு பஞ்சா சாஃப்டா வரும்.
இதை இப்ப தண்ணி ஊற்றி நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு ஒரு கப்பில் உளுந்தம் பருப்பு, கால் கப் ஜவ்வரிசி எடுத்து கொள்ள வேண்டும். இந்த ஜவ்வரிசி சேர்த்தால் இட்லி நல்ல புசுபுசுன்னு நல்லா உப்பி வரும்.

இப்போது ஜவ்வரிசியை அரிசியை நல்லா கழுவிட்டு காயவைத்து கொள்ள வேண்டும். உளுந்துடன் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உளுந்தை எடுத்து மிக்ஸி ஜார் வைத்து சூடாகாமல் இது போல நல்ல மெல்லிசாக அரைச்சு எடுத்து கொள்ள வேண்டும். உளுந்து மாவு நமக்கு ரெடி ஆகிடும்.

அடுத்து அரிசியை 2 கப் அளவிற்கு சேர்த்து இந்த ரவா மாதிரி அரைக்க வேண்டும். அதே சமயத்துல உளுந்து மாவு மாதிரி ரொம்ப பவுடராக இருக்கக்கூடாது அப்பதான் இட்லி வந்து நல்ல பஞ்சு பஞ்சா நல்ல உதிரி உதிரியாக இருக்கும். இப்போது தேவைக்கேற்ப ரெடி பண்ணி வச்ச மாவு எல்லாத்தையுமே மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வாயில் வைத்ததும் கரையும் ஸ்வீட் கார்ன் அல்வா!

இப்போ ஒரு கிலோ, 2 கிலோ, 3 கிலோ ரெடி பண்ணும்போது மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போ நமக்கு வந்து இட்லி மாவு வந்து ரெடி ஆகிவிட்டது. அடுத்ததாக அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.

பின்னர் இட்லி மாவை உப்பு போட்டு வைப்பது போல இதையும் வைத்து விட வேண்டும். இட்லி மாவு பொங்கி வந்தவுடன் நாம் இதனை உபயோகப்படுத்த தொடங்கலாம். இப்படி மாவு ரெடி பண்ணி வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்தினால் கெட்டு போகாமல் மாவு அப்படியே இருக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment