பொதுவாக நம்மில் பலருக்கு பால் என்றாலே பிடிக்காது. மேலும் டீ, காபி போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக வெள்ளம் கலந்து குடிக்கும் பழக்கம் காணப்படுகிறது. அப்படி குடிப்பது நல்லதா என்பதை பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெள்ளம் கலந்த தேநீருடன் அந்த தினத்தை தொடங்க பலர் விரும்புகின்றனர். ஆனால் ஆயுர்வேதத்தின்படி இது ஒரு தவறான கலவையாகும் என கூறப்படுகிறது. வெள்ளம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது.
ஆனால் அதனை டீ அல்லது பாலில் கலந்து குடிக்கும் பொழுது இந்த கலவை ஒரு தவறான கலவையாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டையும் இணைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகிறது.
வெள்ளத்தில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்நிலையில் பால் , டீயுடன் வெள்ளம் கலந்து குடிக்கும் பொழுது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது.
ஆயுர்வேதத்தின்படி உணவுகளின் கலவை தவறாகும் பொழுது அது உடலின் செரிமானத்தை பாதித்து நச்சு கழிவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் இது அஜீரணம், வாயு வயிற்றில் அமிலத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
கலர் புல்லான,துருப்பிடிக்காத புதிய வகை சிலிண்டர்!.. இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்!..
பால் அல்லது டீயில் சர்க்கரை அல்லது பனக்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம் என கூறப்படுகிறது.