நெக்ஸ்ட் தேர்வால் கிளம்பும் புது பிரச்சனை – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Published:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அனைத்து இடங்களுக்கும் தேசிய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதி தேர்வை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, நெக்ஸ்ட் தேர்வு முறையை கைவிட்டு தற்போதுள்ள முறையை தொடர வேண்டுமென பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

மேலும் பொதுக் கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...