நகம் வெட்டியில் இரண்டு சிறிய கத்தி இருப்பது ஏன் தெரியுமா? அதை அப்படி கூட பயன்படுத்தலாமா?

By Velmurugan

Published:

பல் துலக்குதல், குளித்தல் மற்றும் நகங்களை வெட்டுதல் ஆகியவை நமது அன்றாட வாழ்வில் தினமும் செய்யக்கூடிய முக்கிய பணிகளாகும். அதேபோல நகங்களை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். ஏனென்றால் நகங்களின் மூலம் தான் கிருமிகள் நம் வாய் வழியாக நேரடியாக வயிற்று சென்றடைகிறது.

இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படும் சில சமயங்களில் பல நோய்களுக்கும் வழி வகுக்கும். நகங்களை வெட்ட நாம் நைல் கட்டர் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் நகவெட்டியில் இரண்டு கத்தி போன்ற அமைப்பு இருக்கும். இது எதற்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.

நகங்களை வெட்டுவதற்கு மட்டுமே நைல் கட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர இக்கட்டான சில சூழ்நிலைகளில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க தான் இரண்டு வால் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் நகங்களை வெட்டுவது மட்டுமின்றி வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்தலாம். நைல் கட்டரில் இருக்கும் கூர்மையான வளைந்த கத்தியை நகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது என பலர் நினைத்திருப்போம்.

ஆனால் அது எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? அவை சிறிய பொருள்களை கையாள கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் பாட்டில் மூடி திறப்பதற்கு கூட பயன்படுத்தலாம். உண்மையில் நைல் கட்டரில் இரண்டு கத்தி போன்ற அமைப்பை இணைத்த பிறகு இதன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

நாம் எங்கு பயணம் செய்தாலும் இதை எடுத்துச் செல்லலாம். ஏனென்றால் இது மிகவும் சிறியது மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம். வெட்டுவது, துளையிடுவது, பாட்டிலை திறப்பது என பல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்.

அடர்த்தியான, நீண்ட மற்றும் வலுவான கூந்தலுக்கு ரோஸ்மேரியின் 5 நன்மைகள்

மேலும் சிலர் இந்த கத்தியின் கூர்மையான முனைகளை நக அழுக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இவ்வாறு செய்வது நல்லதல்ல. ஏனென்றால் சிறிய கவன சிதறல் இருந்தாலும் இதன் கூர்மையான வளைவுகள் நாம் விரலை காயப்படுத்த நேரிடும். எனவே கவனமாக கையாள வேண்டும்.

மேலும் உங்களுக்காக...