வயதானபிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்ம உடல் செயல்பாடு எல்லாம் குறைந்து விடுகிறது. இது இயல்பான ஒரு விஷயம்தான். உடல் சில அறிகுறிகளை இறப்புக்கு முன்னாடி காட்டும். முதல்ல ஆக்சிஜனின் தேவை குறைந்து சுவாசம் விடுவதில் சிரமமாக இருக்கும். ஆழமான மூச்சாக இருக்காது. நிறைய கொட்டாவி விடுவாங்க. அதிக ஆக்சிஜன் தேவையால்தான் இப்படி விடுவார்கள். மூச்சுவிடும்போது சத்தம் கேட்கும். கரகரன்னு அந்த சப்தம் ஆஸ்துமா மாதிரி கேட்கும்.
ஆக்சுவலா இறக்கப் போறவங்க கஷ்டப்படமாட்டாங்க. நமக்கு அது பயத்தைத் தரும். அந்த நேரத்தில் அவர்களை ஒருக்களிச்சிப் படுக்க வைக்கலாம். தூக்கம் அதிகமா இருக்கும். பேசும்போதே தூங்கிடுவாங்க. அவங்கள சுத்தி நடக்குற விஷயத்துல ஆர்வம் இருக்காது. இறக்கும் முன் கடைசியாக அவர்களுக்குக் கேட்கும் திறன்தான் போகும்.
இறக்கும் முன் கடைசியாக அவருக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதலான விஷயங்களைப் பேச வேண்டும். கடைசி நேரத்தில் தானாகவே சிறுநீர், மலம் கழிக்கும் செயல்கள் நடக்கும். பசியின்மை நடக்கும். மோஷனைக் கன்ட்ரோல் பண்ணக்கூடிய தசைகள் தளர்வடையுது. இது கடைசி கட்டத்துல உள்ளவங்களுக்கான அறிகுறி. சாப்பிடவே மாட்டாங்க. பசி இருக்காது. சாப்பிடுறதுக்கான நீர் ஆகாரத்தை முழுங்கறதுக்குக் கூட எனர்ஜி இருக்காது.
அதனாலயே சாப்பிட மாட்டாங்க. பசி எடுக்கும்போது மென்று சாப்பிட முடியாது. நீராகாரத்தைக் குடிக்க முடியாது. இந்த மாதிரி இருக்குற சூழல்ல அவங்களுக்கு முழுங்கக்கூடிய திறன் இருக்கான்னு பார்க்கணும். இந்த மாதிரி சூழல்ல பால் கொடுக்குறதே ஆபத்துதான். அது சுவாசப்பாதைக்குத் தான் போகும். இறப்பை ஏற்படுத்திடும். இந்த மாதிரி நேரத்துல ஐஸ் கியூப்பை வச்சி உதட்டுல எல்லாம் ஒத்தி எடுக்கலாம். சில நேரங்கள்ல அவங்க உடம்புல இருந்து துர்நாற்றம் வீசலாம்.
கை, கால்கள், விரல்கள் எல்லாம் தொட்டா ஜில்லுன்னு இருக்கும். அவங்க உடல்ல ரத்த ஓட்டம் குறைஞ்சிப் போயிடும். சிலருக்கு மனக்குழப்பம் வரும். சிலர் இறக்கப்போகும் தருவாயில் புது எனர்ஜியோடு எழுந்து உட்காருவாங்க. அதை அணையப்போற விளக்கு பிரகாசமா எரியும்னு சொல்வாங்க. இதைப் பார்த்ததும் சொந்தக்காரங்க எல்லாம் சந்தோஷமாவாங்க. இது தற்காலிகமாகத் தான் இருக்கும். மறுபடியும் இறப்பு நோக்கிப் போகுற வாய்ப்புத்தான் அதிகம்.
பொதுவாக இறப்பு வரும்போது தசைகள் எல்லாம் தளர்வடையும். வாய்ப்பகுதி திறந்த மாதிரி இருக்கும். மூளையோட கன்ட்ரோல்ல இருந்த தசைகள் கட்டாகுது. அதனால தான் தசைகள் தளர்வாகி கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. வாய் திறப்பதும் அதனால்தான். கடைசி கட்டத்துல மூச்சுவிடுறது ரொம்ப லேட்டாகும். இதுக்கு குஸ்மால் பிரீத்திங்னு பேரு. இறப்புக்குக் கடைசி கட்டம் இது.
ரொம்ப நேரம் கழிச்சி லேசா மூச்சு விடுவாங்க. அடுத்த ரெண்டு மூணு நிமிடங்கள்ல இதயத்துடிப்பு முற்றிலும் நிற்கிறது. அடுத்த ஒரு சில வினாடிகளில் ரத்த ஓட்டம், இதயத்துல முழுமையாக ஸ்டாப் ஆகுது. இதுதான் இறப்புக்கான அறிகுறிகள். பொதுவாக வயதானவர்களுக்கு வரும். இது ஸ்மூத்தாகத் தான் இருக்கும். பயப்படுற அளவுக்கு இருக்காது. இறப்பு கொடுமையாக இருக்காது.மேற்கண்ட தகவல்களை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.