தேங்காய் பூவில் என்ன என்ன சத்துக்கள் இருக்கு தெரியுமா? இதோ!

By Velmurugan

Published:

தேங்காய் நாம் சமைக்கும் போது அதிகமாக பயன் படுத்துவோம், இனிப்பு பலகாரங்கள் தவிர்க்காத இடம் தேங்காய்க்கு உண்டு , தேங்காய் பூவில் என்ன என்ன சத்துக்கள் இருக்கிறது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

* பருவ கால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்டுத்தலாம்.

* தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுபாடாக வைக்க முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.

* புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது

தேங்காய்ப்பூ.

* தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.

* வழக்கமாக தேங்காயை உண்கிறோம். இளநீராகவும் உண்கிறோம். தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.

* தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.

* தேங்காய்ப்பூவில் வயது முதிர்ச்சியை தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. தோளில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கும்.

* சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

* இதயக் குழாய்களில் கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.

* பெண்களுக்கு அதிகநாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.

* இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற்படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தேங்காய்ப்பூ தடுக்கிறது.

Leave a Comment