உங்க வாழ்க்கையையே மகத்தானதாக மாற்றும் சீனப் பழமொழிகள்…! அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல பழமொழிகள் உள்ளன. ஆனாலும் வெளிநாட்டு மோகம்தான் நம்மிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் சீனப்பழமொழிகள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வல்லவையாக உள்ளன. இவை வாழ்க்கைக்கு…

நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல பழமொழிகள் உள்ளன. ஆனாலும் வெளிநாட்டு மோகம்தான் நம்மிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் சீனப்பழமொழிகள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வல்லவையாக உள்ளன. இவை வாழ்க்கைக்கு ஒரு உத்வேகத்தையும், மிகப்பெரிய மாற்றத்தையும், வளர்ச்சியையும் உண்டாக்கலாம். அந்த வகையில், நம் மனப்போக்கையே மாற்றத்தக்க 12 சக்தி வாய்ந்த சீனப் பழமொழிகள் என்னென்னன்னு பார்க்கலாமா…

1000 மைல் பயணம், ஒற்றை அடியில் இருந்து தொடங்குகிறது. அதாவது, பெரிய சாதனைகள் சிறிய, நிலையான செயல்களில் இருந்தே தொடங்குகின்றன. லாவோசி கூறிய இந்தப் பழமொழி, ஓர் இலக்கு எவ்வளவு கடினமானதாகத் தோன்றினாலும், முதல் அடியை எடுத்து வைப்பதுதான் முன்னேற்றத்திற்கான திறவுகோல் என்பதைக் கற்பிக்கிறது.

“ஒரு மரத்தை நடுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த நேரமாக இருந்தது. அடுத்த சிறந்த நேரம் இப்போதுதான்” அதாவது, மதிப்புமிக்க ஒன்றைத் தொடங்க, எப்போதும் தாமதப்படுத்தக் கூடாது. தவறவிட்ட வாய்ப்புகளுக்காக பலர் வருந்துகிறார்கள். ஆனால், இந்த பழமொழியோ இன்றே செய்வதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

“மெதுவாக முன்னேற பயப்படாதீர்கள்; அசையாமல் நிற்பதற்கு மட்டுமே பயப்படுங்கள்” அதாவது, நிலையான முன்னேற்றம், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தேங்கி நிற்பதை விட சிறந்தது. வாழ்க்கை என்பது ஒரு பந்தயம் அல்ல. தொடர்ச்சியான முயற்சியிலிருந்தே வெற்றி வருகிறது.

“நீர் தன்னைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வது போல, ஒரு ஞானி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான்” அதாவது, வெற்றிக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறன் மிகவும் அவசியம். மாற்றத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் சவால்களுக்கு ஏற்ப நம்மை மாற்ற்க் கொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் பழமொழி எடுத்துக்காட்டுகிறது.

“நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது பதற்றம் ஏற்படுகிறது. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதுதான் நிம்மதி” அதாவது, உண்மையான அமைதி என்பது உங்கள் உண்மையான சுயத்தைத் ஏற்றுக் கொள்வதிலிருந்தே வருகிறது.

“மெதுவாக வளர்வதற்கு பயப்படாதே, அசையாமல் இருப்பதற்கு மட்டுமே பயப்படு” அதாவது, முன்னேற்றம், படிப்படியாக இருந்தாலும், செயலற்ற தன்மையை விட எப்போதும் சிறந்தது. வளர்ச்சிக்கு நேரம் எடுக்கும். நிலையான முயற்சி, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், வெற்றிக்கு வழிவகுக்கும். பொறுமை மிகவும் முக்கியம். முன்னேற்றம் மெதுவாக இருக்கும் போது சோர்வடைவது எளிது. ஆனால் விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்.

“சிறிய துரதிர்ஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மனிதன் ஒருபோதும் பெரிய விஷயங்களை சாதிக்க முடியாது” அதாவது, சிறிய தோல்விகளை எதிர்கொள்ளும் மன உறுதி வெற்றிக்கு மிக முக்கியமானது. சவால்களும் தடைகளும் நம் பயணத்தின் ஒரு பகுதி.

“கேள்வி கேட்பவன் 5 நிமிடங்கள் மட்டுமே முட்டாளாக பார்க்கப்படுவான். கேள்வியே கேட்காதவன் என்றென்றும் முட்டாளாகவே இருப்பான்” அதாவது, அறிவைத் தேட ஒருபோதும் பயப்படாதே. ஆர்வமும் கற்றுக்கொள்ளும் விருப்பமும் ஞானத்தின் அடையாளங்கள். கேள்விகள் கேட்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,

“பயிற்சியில் எவ்வளவு அதிகமாக வியர்க்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக போரில் ரத்தம் சிந்துகிறீர்கள்” அதாவது, கடின உழைப்பும் முன்தயாரிப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும். பயிற்சியின் போது முயற்சியும் ஒழுக்கமும் சவால்களை எளிதாக சமாளிக்க உதவுகின்றன.

“ஓர் அங்குல நேரம் ஓர் அங்குல தங்கம் மதிப்புள்ளது; ஆனால், ஓர் அங்குல தங்கத்தால் ஓர் அங்குல நேரத்தை வாங்க முடியாது” அதாவது, நேரம் பணத்தை விட மதிப்புமிக்கது. இந்த பழமொழி நம் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த நினைவூட்டுகிறது.

குறைபாடுள்ள வைரம், ஒன்றும் இல்லாத கூழாங்கல்லை விட சிறந்தது” அதாவது, குறைபாடுகள் மதிப்பை மறைத்து விடக்கூடாது. முழுமை என்பது ஒரு மாயை. குறைகள் இருந்த போதிலும் மதிப்புமிக்கதாக இருப்பது முக்கியம். உங்கள் பலங்களையும் பங்களிப்புகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள், அவை சரியானதாக இல்லாவிட்டாலும் கூட. முழுமைக்காக பாடுபடுவதை விட, சிறப்புக்காக பாடுபடுங்கள்.