இந்த உணவுகள் சாப்பிட்டா நஞ்சாக மாறுமா? அந்த 7 உணவுகள் என்னென்ன தெரியுமா….

Published:

உலகில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர் உண்ட பின் நஞ்சாக மாறும் ஃபுட் பாய்சன் ஆல் பாதிக்கப்படுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய் தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அமெரிக்காவில் செயல்படும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் தகவலின் படி வேகவைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி சரியாக கழுவப்படாத காய்கறிகள், பச்சை பால் ,பிற பால் பொருட்கள், அதிக நாட்கள் தேக்கி வைக்கப்பட்ட முட்டைகள், சரியாக சுத்தம் செய்யப்படாத மீன் போன்றவற்றை உண்ணும் போது அவை நச்சுத்தன்மைக்கு மாறுகின்றன.

மேலும் அசுத்தமான முளைகட்டிய பயிர்கள் மற்றும் அதிக காலம் பயன்படுத்தப்படாத மாவு என இந்த மேற்கூறிய ஏழு உணவுகளும் சாப்பிட்ட பிறகு எளிதாக ஃபுட் பாய்சன் ஆல் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன.

உணவில் உள்ள எல்லா வகை பாக்டீரியாவும் எப்போதும் தீங்கு விளைவிப்பது இல்லை. சில வற்றால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நம் வயிற்றில் பல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை உயிருக்கு ஆபத்தான நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கின்றன.

முடி கொட்டுதே கவலையா… 30 நாட்களில் இழந்த முடியை வேகமாக வளர இந்த பேஸ்ட் ட்ரை பண்ணுங்க!

இருப்பினும் உணவு நச்சு தன்மைக்கு பயந்து எந்த பாக்டீரியாவையும் தவிர்த்து தீவிர சுகாதாரத்தை பின்பற்றுவதும் நல்லதல்ல என்றும் உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

மேலும் உங்களுக்காக...