நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டிற்குள்ளேயே இருக்கிறீர்களா? ஒரே இடத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும், மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
இந்த வாழ்க்கை முறையில் உடல் கொழுப்பு அதிகரிப்பதற்கும் ,ஒரே இடத்தில் அதிகமாக உட்காருவதால் அது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு ஏற்பட்டால் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், பாதங்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். நீங்கள் வெளியே செல்லவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்யவும் அதிக வாய்ப்பு இல்லாதவராக இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் வசதிகளிலிருந்து பயிற்சிகளைச் செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய 5 எளிய உடற்பயிற்சி இதோ.
1. வீட்டில் எளிமையான நடைப்பயிற்சி அல்லது வேகமான நடைப்பயிற்சி:-
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வீட்டைச் சுற்றி அல்லது மொட்டை மாடியில் சுற்றி வரலாம். உங்கள் சகிப்புத்தன்மைக்கு ஏற்ப அதை இடைவெளி விட்டு செய்யலாம். மேலும் தினசரி வழக்கத்தில் படிக்கட்டு ஏறுவதைச் சேர்த்து கொள்ளலாம்.
2. நிலையான சைக்கிள்:-
நீங்கள் வீட்டிலேயே ஒரு நிலையான சைக்கிள் ஓட்டலாம், இது உங்கள் இருதய துடிப்பை அதிகரிக்கும் போது கலோரிகள் மற்றும் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது ஒரே நேரத்தில் உங்கள் கீழ் உடல் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
3. நடனம்:-
இசையை விரும்புபவர்கள் கொழுப்பை குறைக்கவும் கலோரிகளை குறைக்கவும் நடனத்தை தேர்வு செய்யலாம். நடனம் என்பது ஏரோபிக் உடற்பயிற்சியின் ஒரு சிறந்த தொகுப்பாகும். நடனம் தெரியாதவர்கள் வீட்டிலேயே இருந்தபடி யூடியூப் வீடியோக்களை பின்பற்றி முயற்சி செய்து பார்க்கலாம்.
சர்க்கரை நேயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன் படுத்தலாமா? விளக்கம் இதோ …
4.யோகா:-
யோகா என்பது சுவாசப் பயிற்சிகள் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். இது எல்லா வயதினருக்கும் பாதுகாப்பான உடற்பயிற்சியும் ஆகும். மேலும் இதை அனைத்து வயதினரும் மிகவும் எளிமையாக பின்பற்றலாம்.
5. தோட்ட பராமரிப்பு :-
தோட்ட பராமரிப்பு என்பது வீட்டை அழகாக்கவும் மற்றும் உடற்பயிற்சிக்கு மாற்றவும் பின்பற்ற கூடிய மிக முக்கியமான வழிமுறையாகும். இதில் சூரிய ஒளியில் மூலம் நிறைய வைட்டமின் டி பெறுவீர்கள், மேலும் அனைத்து உடல் உறுப்புகளை பயன்படுத்துமாறு உள்ளடக்கிய தூக்குதல், தோண்டுதல், வளைத்தல், நீட்டுதல் ஆகியவற்றை செய்ய முடியும். உங்கள் சொந்த தோட்டத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் வீட்டில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்களே இதன் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும்.