உடல் புத்துணர்ச்சியா இருக்குணும்னா நல்ல சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், அதிலும் காலை உணவு மிகவும் முக்கியமானது. அதை சத்தானதாகவும் சுவையானதாகவும் எடுத்து கொண்டால் நல்லது. அந்த வகையில் வெந்தயக் கீரை நமது உடலுக்கு தேவையான குளிச்சி மற்றும் சத்துக்களை அளிக்க கூடியது.
அதை வைத்து சுவையான சப்பாத்தி செய்யலாமா,, வாங்க
செய்ய தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை – 1 கப்
கோதுமை மாவு – 2 கப்
கடலை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1
ஓமம் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
முதலில் வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம் அதை பொடியாக நறுக்கி கொள்ளவும், பின்பு கோதுமை மாவுடன் , கடலை மாவு, உப்பு, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், ஓமம், மிளகாய் தூள் , 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பிசைந்து கொள்ளவும்
பிசைந்த சப்பாத்தி மாவை 1 மணி நேரத்திற்கு தனியாக ஊற வைக்கவும்.
பின்னர் உருண்டை உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும் சப்பாத்திகளை, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
ஹோட்டல் போல “பூரி” மிருதுவா வேணுமா? ரகசியம் தெரியுமா? இதோ..
இதில் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
இப்போது சுவையான வெந்தயக் கீரை சப்பாத்தி ரெடி, இதனை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், சுவை நாக்கிலே நிற்கும்.