சுவை மிகுந்த மோமோஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாறி உள்ளது. மேலும் இதில் எண்ணெய் குறைவாக உள்ளதால் உடல் நலத்திற்கு உகந்தது. காய்கறிகளை பயன்படுத்தி நாம் செய்யும் வெஜிடபிள் மோமோஸ் உடலின் ஜீரண சக்திக்கு ஏற்றதாக அமைகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக மோமோஸ் இருப்பதால் இந்த வெஜிடபிள் மோமோஸை வீட்டிலே செய்து மகிழலாம்.
வெஜிடபிள் மோமோஸுக்கு தேவையான பொருட்கள்:
மைதா – 200 கிராம்
நெய் அல்லது எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை
உப்பு – ருசிக்கேற்ப
குடைமிளகாய் – 2
முட்டைக்கோஸ் – 1 சிறிய கப் (பொடியாக நறுக்கியது)
காலிஃபிளவர் – 1 சிறிய கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் – 2 (துருவியது)
பச்சை பட்டாணி – அரை சிறிய கப்
பன்னீர் – 100 கிராம்
நெய் அல்லது எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கருப்பு மிளகு – ¼ ஸ்பூன்
சிவப்பு மிளகு – 1 சிட்டிகை
கொத்தமல்லி – அரை சிறிய கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கு ஏற்ப
வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
செய்முறை
மோமோஸின் வெளியுரை தயார் செய்ய மைதா மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அதை மிருதுவாக செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அதை தனியாக ஊற வைக்க வேண்டும்.
ஒரு வானொலியில் நெய்யை போட்டு சூடாக்கவும். முதலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய், உப்பு மற்றும் கொத்தமல்லி கலந்து கிளறி 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது பன்னீரை துருவி வானொலியில் சேர்த்து கொள்ளவும், இதையும் அடுத்து 2 நிமிடங்களுக்கு சேர்த்து வதக்கவும்.
இப்போது நமக்கு மோமோஸின் உள்ளே வைப்பதற்கான பூரணம் தயாராக உள்ளது.
இப்போது மைதா மாவின் ஒரு உருண்டையை எடுத்து அதை வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் உள்ளே வைப்பதற்கான பூரணத்தை சேர்த்து அனைத்து பக்கங்களையும் ஒருசேர முடி மோமோஸ் வடிவில் செய்து கொள்ள வேண்டும்.
மிளகு, சீரகம் இல்லாமல் பெரிய நெல்லிக்காய் வைத்து ஒரு சுவையான ரசம் ரெசிபி!
இப்படி நம்மிடம் இருக்கும் அனைத்து மாவுகளுக்கும் பூரணங்களை நிரப்பி மோமோஸ் வடிவில் செய்து முடிக்க வேண்டும்.
இதை இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் சேர்த்து வேக வைக்க வேண்டும். இப்பொழுது நமக்கு சுவையான மோமோஸ் தயார்
இதை தக்காளி, சிவப்பு மிளகாய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.