ஸ்வீட் கார்னில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைய உள்ளது. சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் வைத்து அல்வா செய்து கொடுக்கலாமா..
தேவையான பொருட்கள்
• ஸ்வீட் கார்ன்-1 கப்
• ரவை-1 தேக்கரண்டி
• முந்திரி-10
• கிஸ்மிஸ்-15
• சர்க்கரை -1/2 கப்
• நெய்- 3-5 தேக்கரண்டி
• பால்-1/2 கப்
• ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி
செய்முறை
• முதலில் ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு பரபரப்பாக அரைத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
• பின்பு ரவையை நெய்யில் வாசனை வரும்வரை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
• இதனுடன் அரைத்து வைத்த கார்னை ஒன்று சேர்த்து 8 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
• இதனுடன் பால் சேர்த்து விடாமல் கிளறவும். பால் நன்றாக வற்றிய பின் சுவைகேற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளவும் .
ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..
• கடைசியாக ஏலக்காய் தூள்,சிறிதளவு நெய்,வறுத்து வைத்துள்ள முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து சூடாக கிளறவும். இப்போது சூடான சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் அல்வா தயார்.