கர்ப்பிணி பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய சுரைக்காய் வைத்து புதுசா சுரைக்காய் மசாலா!

By Velmurugan

Published:

உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் தான் ஆனது. நம் உடலுக்கு நீர் சத்து அதிகமாக தேவை ,அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் நீர் சத்து மிகவும் முக்கியமானது, நீர் சத்து அளவு பொறுத்து தான் அவரது பிரசவம் அமையும். அப்படி இருக்கையில் நீர் சத்து உள்ள சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் சிறப்பானது.

செய்ய தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 1/2 கிலோ

தயிர் – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மல்லி தூள் – 2 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சுரைக்காயை நன்கு கழுவி தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்த சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

பின் சுரைக்காய் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை, 2 நிமிடம் வதக்கி கொள்ளவும் ,

பின்பு அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி கொள்ளவும், பின்பு கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

surakkaay

பிறகு தயிரை அத்துடன் சேர்த்து கிளறிவிடவும் அதை 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் .

பின்பு 10 நிமிடம் கழித்து சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விடவும். இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி.

ஹோட்டல் ஸ்டையில் தித்திக்கும் மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய்! ரெசிபி இதோ ..

குறிப்பு :

இதன் மேல் கொத்தமல்லி தலையைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.