ஹோட்டல் ஸ்டையில் தித்திக்கும் மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய்! ரெசிபி இதோ ..

பிரியாணி என்ன தான் டெஸ்ட்டாக இருந்தாலும் இலை பந்தி சாப்பாடுனு சொன்னா போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவோம், தலவாழை இலை போட்டு சாதம் குழம்பு வகைகள் காய்கறிகள், வடை பாயசம் , அப்பளம் , ஊறுகாய் என அடுக்கிடே போகலாம். இப்படி சாப்பிட்டா தான் ஒரு திருத்தி இருக்கும்.

அப்போது இலையில் தவறாம இருப்பது ஊறுகாய் அதிலும் மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய் வைத்தால் சுவை வாயிலே இருக்கும். அந்த மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாயை வீட்டுலே செய்து பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்.

கேரட் – கால் கப்

பீன்ஸ் – கால் கப் ,

உருளை – கால் கப்

கத்திரிக்காய் – கால் கப்,

பாகற்காய் – கால் கப் ,

எலுமிச்சை பழம் – 4,

வெந்தயம் – அரை தேக்கரண்டி ,

கடுகு – ஒரு தேக்கரண்டி ,

மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,

காய்ந்த மிளகாய் – 15,

வினிகர் – கால் கப்,

கடுகு எண்ணெய் – சிறிதளவு,

உப்பு – சுவைக்கு ஏற்ப .

செய்முறை.:

முதலில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் நன்கு சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளவும் (அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ளவும்).

பின்பு மேலே கொடுத்துள்ள காய்களை நன்கு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதை சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் , வதங்கிய காய்கறிகளுடன் இந்தப் பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும், அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன் பின் அந்த தொக்கு பதத்திற்கு வரும் அதை ஒரு பாட்டில் (அ) பாத்திரத்தில் நன்கு கலந்து மூடி கொள்ளவும்.

பிறகு அதனுடன் வினிகர் , எலுமிச்சைச் சாறு அதில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதில் கைகளை பயன் படுத்த கூடாது. கை பட்டால் விரைவாக கெட்டு போய்விடும்.

அதன் பின் கொஞ்சம் கடுகு எண்ணெய் சேர்த்து தாளித்து அதன் மீது ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்திருக்கவும் (நடுநடுவே குலுக்கி வைக்கவும் ).

திருநெல்வேலி கல்யாண வீட்டு ஸ்பெஷல் அவியல்! அதே சுவை நம்ம வீட்டுலையும் செய்யலாமா…

காய்கறிகள் அந்த கலவையில் நன்கு ஊறி பின்பு , இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம். இதை தயிர் சாதம், சாம்பார் சாதம் , எலுமிச்சை சாதம் என அனைத்திற்கும் சிறப்பாக இருக்கும்.

வேண்டுமென்றால் வெறும் சாதத்திலும் இதை பிணைந்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும் பல நாட்கள் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews