மாலை நேரங்களில் பொதுவாக ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது வழக்கம், அந்த வகையில் புதுசாக காரசாரமான முறுமுறு மசாலா கச்சோரி செய்து பார்க்கலாமா..
தேவையான பொருட்கள்:
மைதா – 2 கப்
தயிர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ஓமம் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – சுவைக்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
புதினா – 1 கப் (நறுக்கியது)
மல்லி தூள் – 1 கப்
பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மாங்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தயிர், உப்பு, ஓமம் கலந்து , தண்ணீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் , அதை 1 மணிநேரம் தனியாக ஊர வைத்துக் கொள்ளவும் .
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், மாங்காய் பொடி, மல்லி தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிளற வேண்டும்.
அதில் கரம் மசாலா மற்றும் புதினா சேர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் தயிர் புளிக்க வில்லையா? சீக்கிரம் புளிக்க – 7 எளிய குறிப்புகள் இதோ…
அடுத்து அந்த பூரி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வட்டமாக தேய்த்து, அதன் நடுவே, அந்த மசாலாவை வைத்து , மூடி விடவும் . பிறகு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, பூரி மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மசால கச்சோரி ரெடி. இதை புதினா சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.