நம் வீடுகளில் காலை உணவுகளில் தவறாமல் இருப்பது இட்லி தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற உணவாக இட்லி தான் உள்ளது, அதிலும் புதுசாக ஸ்பெஷல் காஞ்சிபுரம் இட்லி ட்ரை பண்ணலாமா!
செய்முறை:
1.பச்சரிசி- 1 கப்
2.புழுங்கலரிசி -1 கப்
3.உளுத்தம் பருப்பு -1 கப்
4.புளித்த தயிர்- 1 கப்
5.மிளகு -1 தேக்கரண்டி
6.சீரகம் – 1 தேக்கரண்டி
7.பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி
8.நெய் – 2 தேக்கரண்டி
9.கறிவேப்பிலை – சிறிதளவு
10.உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை:
1. முதலில் அரிசியையும் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
2.அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
3.மாவில் மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து நன்கு கலந்து கொள்ள கொள்ள வேண்டும்.
4.அதன் பின்இட்லி பாத்திரத்தில் வாழை இல்லை வைத்து அதன் மேல் நெய்யை தடவி கலந்து வைத்துள்ள மாவை ஊற்ற வேண்டும் .15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!
குறிப்பு: சாதாரண இட்லியைப் போல ஒருநாளில் கெட்டுப்போகாது. 2 நாள் வைத்துச் சாப்பிடலாம். சுவை குறையாமல் இருக்கும்.