பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் உணவான மட்டன் கீமா வடை செய்வது எப்படி?

Published:

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜானுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை பக்ரீத் ஆகும். இந்த ஹஜ் பெருநாளானது இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் தியாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தியாகத் தினத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியும் புத்தாடை அணிவித்து மகிழ்ந்தும் கொண்டாடுவர். மாடு, ஆடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு குர்பானி கொடுப்பது வழக்கம். அப்படி குர்பானி கொடுப்பதை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கு ஏழைகளுக்கும், இன்னொரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், மூன்றாவது பங்கினை தங்களுக்கும் என பிரித்து கொள்வர்.

இந்த பக்ரீத் திருநாள் அன்று விதவிதமான உணவுகளை சமைத்து உண்டு மகிழ்வார்கள். இப்படி பக்ரீத் சிறப்பு உணவில் கட்டாயம் இடம்பெறக்கூடிய ஒரு உணவு தான் மட்டன் கீமா வடை.

மட்டன் கீமா வடை செய்ய தேவையான பொருட்கள்:
  • மட்டன் கீமா கறி – 200 கிராம்
  • கடலைப்பருப்பு – கால் கப்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • வெந்தயம் – முக்கால் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
  • கடலை மாவு – ஒரு ஸ்பூன்
  • இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 ஸ்பூன்
  • பூண்டு பொடியாக நறுக்கியது – 1 ஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு

images 3 18

மட்டன் கீமா வடை செய்யும் முறை:

கடலை பருப்புடன் சீரகம் வெந்தயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

மட்டன் கொத்துக் கறியுடன் ஊற வைத்த கடலை மாவு கலவையை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, உப்பு ஆகியவற்றை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை வைத்து மாவினை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும்.

குறைந்த தீயில் இருந்தால் தான் மட்டன் நன்கு வெந்து வரும்.

அவ்வளவுதான் பக்ரீத் ஸ்பெசல் சுவையான மட்டன் கீமா வடை தயார்.

மேலும் உங்களுக்காக...