உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்… நீர் உருண்டை! செய்வது எப்படி?

By Sowmiya

Published:

நீர் உருண்டை என்பது பாரம்பரியமான சிற்றுண்டி வகையாகும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடித்து வீடு திரும்பும் நபர்கள் மற்றும் வீட்டில் இருந்து வீட்டை பராமரித்து எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகள், முதியோர்கள் என அனைவருக்குமே மாலை நேரம் ஆனாலே ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம் என்று தோன்றும். அப்படித் தோன்றும் பொழுது எளிமையாக அதேசமயம் சுவையாக ஒரு சிற்றுண்டி வகையை தயார் செய்து சாப்பிடலாம் என்றால் அதற்கு நீர் உருண்டை சரியான தேர்வு.

இதனை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மிக சுலபமாக செய்துவிடலாம் சுவையாகவும் இருக்கும்.

அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான பச்சைப் பயறு கடையல் சாதம்…!

நீர் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
  • அரிசி மாவு – அரை கிலோ
  • கடுகு – அரை ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு –  2 ஸ்பூன்
  • தேங்காய் – கால் மூடி துருவியது
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • காய்ந்த மிளகாய் – 7 (துண்டுகளாக நறுக்கி)
  • உப்பு – தேவையான அளவு

neer urundai

நீர் உருண்டை செய்யும் முறை:

அரிசி மாவில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பொரிந்ததும் இதனுடன் காய்ந்த மிளகாயை சேர்க்கவும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது பிசைந்து வைத்துள்ள அரிசி மாவினை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

மாவு நன்றாக கலந்து சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது கை பொறுக்கும் சூட்டில் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு இட்டலி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

இட்டலி ஊற்றும் தட்டில் இந்த உருண்டைகளை வைத்து வேக வைக்கவும்.

ஐந்து நிமிடங்கள் வெந்தபின் சுவையான நீர் உருண்டை தயார்.

இதனை மிளகாய் சட்னி உடனும் பரிமாறலாம்.