எள் விதைகள் அதன் ஊட்டச்சத்து, குடல் புண்களை குணப்படுத்தும் பண்புகளுக்காக சமையல் மற்றும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஃபிளாவனாய்டு ஃபீனாலிக் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் டயட்டரி ஃபைபர் போன்ற சில பைட்டோநியூட்ரியண்ட்களுக்கு எள் விதைகள் ஆதாரமாக உள்ளன.
அரிசியில் அமினோ அமிலங்கள் (புரதத்தின் கட்டுமானத் தொகுதிகள்) மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. அரிசியுடன் எள்ளு சேர்த்து சாதம் செய்யும் போது அது குழந்தைக்குகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது.
எள்ளு சாதம் செய்முறை
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
உப்பு – சுவைக்கு ஏற்ப
கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
துருவிய வெல்லம் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 5-6 (துண்டுகளாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
மசாலா தூள் – 1 ஸ்பூன்
வெள்ளை எள் – 100 கிராம்
செய்முறை
அரிசியை முதலில் சமைத்து தனியாக வைக்கவும் ,தானியங்கள் தனித்தனியாக உதிரியாக இருக்க வேண்டும்.
அடுத்து வெள்ளை எள்ளை வறுத்து பொடியாக மாற்றிக்கொள்ளவும்.
ஒரு கடாயில், எண்ணெய் சேர்க்கவும். சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
அடுத்து விதைகள் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வேகவைத்த சாதம் , உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும், அது ஒன்றாகக் கலக்கும் வரை மற்றும் பொருட்களின் நல்ல வாசனை வரும் வரை கிளறவும் .
உடல் அசதியா இருக்குதா… தினமும் காலை, மாலை இந்த கஞ்சி குடிச்சி பாருங்க.. அசந்து போய்ருவிங்க…
அத்துடன் எள்ளு பொடியை சாதத்துடன் சேர்த்து கிளறவும் . அப்பொழுது தேவைப்பட்டால் சிறிது நெய், வெள்ளம் சேர்த்து கொள்ளலாம். மேலும் காரமாக வேண்டும் என்றால் அதனுடன் மசாலா சேர்த்து கொள்ளலாம்.இப்பொழுது எள்ளு சாதம் பரிமாற தயாராக உள்ளது.