குழந்தைகளுக்கு பிடித்தமான பாஸ்தா வைத்து வெஜிடபிள் பிரியாணி ரெசிபி!

By Velmurugan

Published:

குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா வைத்து இன்று வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்து பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள் :

பாஸ்தா – 200 கிராம்

குடைமிளகாய் – 1

கேரட், பீன்ஸ் – 100 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 2

கொத்தமல்லி – அரை கப்

புதினா – அரை கப்

தயிர் – 2 கப்

உப்பு – தேவைக்கு

மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி.

தாளிக்க…

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – 1 தேக்கரண்டி

சோம்பு – 2 தேக்கரண்டி

பட்டை – 2

கிராம்பு – 2

பிரிஞ்சி இலை – 2.

ஏலக்காய் – 1

செய்முறை :

குடைமிளகாய் ,வெங்காயம், தக்காளி,கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்ததும் வடிகொட்டி குளிர்ந்த நீரில் அலசி சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது உதிரியாக இருக்கும்.

கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கிய பின் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.பின் தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்… சிக்கன் சூப் குடிக்கலாம் வாங்க…

மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

இப்போது சூப்பரான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment