ரோட்டோர டீ கடைகளில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் ரெசிபி வேண்டுமா? இதோ!

By Velmurugan

Published:

பொதுவாக நாம் பயணங்களின் போது ரோட்டோரா டீ கடைகளில் கிடைக்கும் போண்டாகளை சாப்பிட்டிருப்போம், அதில் அனைவருக்கும் பிடித்த மைசூர் போண்டாவின் ரெசிபி இதோ..
மைசூர் போண்டா

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு – 1 கப்

பச்சரிசி – 1 தேக்கரண்டி

இஞ்சி – 1 துண்டு

மிளகு – 2 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

மிளகாய் – 2

முந்திரி பருப்பு – 10

தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு

கருவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயம் – 2 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

உடல் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!

செய்முறை

உளுத்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சீரகம், மிளகு, முந்திரி பருப்பு, தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

எண்ணையை காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக எடுத்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment