ஆஹா! அருமையான சுவையான பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி?

Published:

மோர் குழம்பு தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவாகும். செய்வதற்கு மிகவும் எளிமையாகவும் அதே சமயம் மிகவும் சுவையாகவும் இருக்கக்கூடிய உணவு.

அடிக்கிற வெயிலுக்கு சுவையாக சாப்பிட வேண்டும் ஆனால் காரமாக இருக்கக் கூடாது என்று விரும்பினால் அதற்கு மிகச் சிறந்த தேர்வு மோர் குழம்பு.

mor kuzhambu

தேவையான பொருட்கள்

  • கெட்டி மோர் – 3 டம்ளர்
  • பச்சை மிளகாய் – 6-8
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • இஞ்சி – 1 சிறிய துண்டு
  • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
  • துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • பச்சரிசி – 1 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • மிளகு – 1/2 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 மூடி
  • உப்பு – தேவையான அளவு

தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • மிளகாய் – 2
  • கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை – சிறிதளவு

பக்கோடா செய்முறை

  1. கடலைப்பருப்பு , துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றும் சம அளவில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பருப்பு நன்கு ஊறிய பிறகு மிளகாய் சீரகம் பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் கெட்டியாக அதிக தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க விட்டு வெந்ததும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மோர் குழம்பு செய்முறை

  1. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து தாளிப்பிற்காக வைத்திருந்த பொருட்களை போட்டு தாளித்து அரைத்த விழுதினை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
  3. மோரினை வதக்கிய அரைத்த கலவையுடன் சேர்க்க வேண்டும்.
  4. தற்பொழுது குறைத்து எடுத்த பக்கோடாவை போட்டு நுரை கோடி வரும்போது இறக்கி விடவும்.
  5. அதிக நேரம் கொதிக்க விடுதல் கூடாது.

மேலும் உங்களுக்காக...