குழந்தைகள் வாயில் வைத்ததும் கரையும் மாம்பழ கேசரி! ரெசிபி இதோ!

Published:

மாம்பழம் சொன்னாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்று. தித்திக்கும் இந்த மாம்பழத்தை வைத்து குழந்தைகள் பாட்டு பாடி மகிழ்வதும் வழக்கம். மாம்பழத்தின் வண்ணமும் , வாசம் குழந்தைகளை மிகவும் கவரும் வண்ணத்தில் தான் இருக்கும்.

பலவகையான மாம்பழங்கள் உள்ளது, அதன் நிறம் ,வடிவம் , சுவைக்கு ஏற்ப அதற்கு பல பெயர்களும் உள்ளது. ஆனால் எல்லா மாம்பழங்களுள் சுவையில் இனிப்பாக தித்திப்பாக தான் இருக்கும்.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை யாராலும் மறக்க முடியாது. இந்த மாம்பழத்தை வைத்து சாக்லேட் , பாயாசம் , ஐஸ்கிரீம், பலூடா , பர்பி ,அல்வா ,மில்க் ஷேக் என பல விதவிதமான உணவுகளை தயாரிக்க முடியும்.

அந்த மாம்பழத்தை வைத்து புதுமையாக கேசரி செய்து பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கப்

நன்றாகப் பழுத்த வாசனை வரும் மாம்பழம் – 1

சர்க்கரை – அரை கப்

நெய் – 4 தேக்கரண்டி

ஏலக்காய் – 2

முந்திரி – 10 -15 வரை

பாதாம் – 10 -15 வரை

தண்ணீர் – 3 கப்

செய்முறை :

முதலில் அடி கனமான கடாயில் முதலில் னே சேர்த்து முந்திரி, பாதாம் அவற்றை வறுத்து கொள்ளவும் , அதன் பின் மீண்டும் நெய் சேர்த்து அதில் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

அதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். அடுத்ததாக மாம்பழத்தை நன்றாக கழுவி தோல் சீவி நன்கு துருவி மசித்து கொள்ளவும். துண்டுகளாக இல்லாமல் மாவாக மாறும் வரை மசித்து கொள்ளவும்.

அடுத்ததாக அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் அதில் ரவையை மெதுவாக சேர்த்து கிளறவும், கிளறாமல் விட்டால் கட்டி கட்டியாக மாறிவிடும். அதனால் விடாமல் கிளறி கொடுக்கவும்.

மாதுளை இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? அல்லது குறைக்குமா?

அந்த நேரத்தில் சிறுது நெய் சேர்த்து கிளறினால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும். மேலும் ரவை பாதி அளவு வெந்ததும், சர்க்கரை மற்றும் மாம்பழத்தைக் கலந்து கேசரி பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.

அப்போது கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரியை கேசரியின் மேல் தூவி கிளறி மூடவும். சுவையான ‘மாம்பழ கேசரி’ தயார்.

 

 

மேலும் உங்களுக்காக...