மளிகைப்பொருட்களில் பூச்சி அரிக்காமல் இருக்கனுமா?!

By Staff

Published:

d82818a9427429d3cb8249eab2d010d1

 

பல்வேறு தடைகளைத்தாண்டி நம் கைக்கு உணவுப்பொருட்கள் வந்து சேர்கின்றது. அதனால், ஒவ்வொரு தானியமுமே முக்கியமானது. ஒரு தானியத்தையும் வீணாக்கக்கூடாது. நமது கைகளுக்கு தானியங்கள் வந்ததும் அதை சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்தால் நீண்ட நாட்களுக்கு தானியங்கள் கெடாமல் இருக்கும். வெயில்காலங்களில் அவ்வளவாக பிரச்னை இருக்காது. மழை மற்றும் குளிர்காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். பூச்சிகள் தொந்தரவுகளிலிருந்து அரிசி, பருப்பு, மாவு உள்ளிட்ட மளிகைப்பொருட்களை காக்கும் வழிமுறைகளைதான் இப்ப பார்க்கப்போறோம்…

1.உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

2.பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

3.துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

4.அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது. காய்ந்த வேப்பிலைகளையும் போட்டு வைக்கலாம்.

5.புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

5.தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

6.சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

7.அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

8.எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம். அவ்வ‌ப்போது சூ‌ரிய ஒளியில் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம். முக்கியமாக கொண்டைக்கடலை, பட்டாணி மாதிரியான பொருட்களை வெயிலில் போட்டு எடுத்து வைக்கலாம். 

9.வேர்க்கடலையை வெயிலில் போட்டு எடுக்கக்கூடாது. எண்ணெய் பிசுக்கு வாடை வருவதோடு, கடலையில் தோல் கருப்பாகிவிடும். உளுத்தம்பருப்பினையும் வெயிலில் காய வைக்கக்கூடாது.

10. வெங்காயம், பூண்டினை காத்தாட நிழலில் உலர்த்தி வைத்தாலே போதும்.

இப்படி செய்தால் மளிகைப்பொருட்கள் நீண்ட நாட்களுக்கு வரும்.

Leave a Comment