
தமிழ் காமெடி நடிகர் போண்டாமணிக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் போண்டாமணி தனக்கு கொரானா பாதிப்பு என்று வெளிவந்துள்ள செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தான் முழு ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது