உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இப்போது கொள்ளு பொடி செய்வத எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு உணவில் எடுத்து கொள்ளும் பொது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் கரையத்துடங்கும்.
தேவையானபொருட்கள்…
கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
கொப்பரைத் தேங்காய் துருவல் – கால் கப்,
எண்ணெய்,-தேவையான அளவு.
உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை…
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய் ,கொப்பரைத் துருவல், கொள்ளு அனைத்தையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். நிறம் மாறினால் சுவை மாறும்.
வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாயப்பிடலாம் … அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் இதை கலந்து சாப்பிடலாம்.
வீட்டுல தக்காளி நிறைய இருக்குதா.. நான்வெஜி டெஸ்ட்டுல தக்காளி காளான் பிரியாணி ரெசிபி!
தினமும் இந்த பொடியை தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையில் மாற்றம் இருக்கும்.