வீட்டுல தக்காளி நிறைய இருக்குதா.. நான்வெஜி டெஸ்ட்டுல தக்காளி காளான் பிரியாணி ரெசிபி!

மழைக்காலங்களின் தொடக்கத்தில் தக்காளி காளான் ரொம்ப புதுசா பிரஸ்சா கிடைக்கும், அதை வைத்து நான்வெஜி டெஸ்ட்டுல தக்காளி காளான் பிரியாணி சாப்பிடலாமா… இந்த காளான் மிகவும் சத்து நிறைந்தது.
அதை அதிகமாக உணவில் எடுத்து கொள்ளும் போது உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி – 250 கிராம்

தக்காளி – 250 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

மஷ்ரூம் – 1 பாக்கெட்

மிளகாய்த்தூள் – தேவையான அளவு

மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி

கரம்மசாலா தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – தோவையான அளவு

பட்டை – 1

லவங்கம்,இலை – 4

ஏலக்காய் – 3

புதினா – தோவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

நெய் – 4 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை:

அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.மஷ்ரூம் நன்றாக கழுவி சிறிது நேரம் வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், மஷ்ரூம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு, பட்டை இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லி தழை இவை நன்றாக கழுவி பொடியாக கொள்ளவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி லவங்கம், ஏலக்காய், இலை, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். தேவையான மிளகாய்த்தூள் , கரம்மசாலா தூள் ,மிளகு தூள் சேர்க்கவும்,

பிறகு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும் பின் அரிசி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு பிறகு உப்பு சேர்க்கவும்,

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்சா சுவையான சோள இடியாப்பம் செய்து கொடுக்கலாம் வாங்க..

பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி வைக்கவும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும் . சிறிது நேரம் கழித்து நெய் சேர்த்து கிளறிக்கொடுக்கவும்.

பிறகு 15 நிமிடம் கழித்து பார்த்தால் சாதம் நன்றாக வெந்து பிரியாணி தயாராகி இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.