இட்லி மாவு இல்லையா.. 5 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊரும் அவல் தோசை.. ரெசிபி இதோ!

By Velmurugan

Published:

நம் வீடுகளில் பொதுவாக காலை நேரங்களில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் தயார் செய்து வழக்கம். மேலும் இது செரிமானத்திற்கும் சிறந்ததாக அமையும். ஆனால் குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரியான உணவை விரும்புவதில்லை.

அவர்களுக்கு பிடிக்கும் வகையில் வித்தியாசமான உணவுகளை எளிமையாக 5 நிமிடத்தில் செய்து கொடுத்தால் விரும்பி ஆசையாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் மிகவும் சத்து நிறைந்த அவல் தோசை ரெசிபி இதோ உங்களுக்காக…

தேவையான பொருட்கள்

1 கப் – அவல்

1/4 கப் – அரிசி மாவு

1 – வெங்காயம் (பொடியாக நறுக்கியது)

1 தேக்கரண்டி – சீரகம்

2-3 – பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)

1 – சிறிய துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது)

2 டீஸ்பூன் – கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது)

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை

முதலில் அவலை நன்கு கழுவி 15-20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். அதை மிக்ஸியில் அரிசி மாவுடன் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்ததாக தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் கொழுக்கட்டை! ஒரு முறை ட்ரை பண்ணுங்க…. அடிக்கடி சாப்பிடும் ஆசை வரும்…

தோசை கல்லை சூடாக்கி சாதாரண தோசைகள் செய்வது போல் தோசைகள் செய்யவும்.

இந்த தோசை செய்யும் போது நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தினால் வாசனையாக இருக்கும்.

இப்பொழுது அவல் தோசை தயார். இதை தேங்காய் சட்னியும் சேர்த்து சாப்பிடலாம்.