சிறுதானிய வகைகளில் சத்துக்கள் நிறைந்த ஒன்றுதான் சாமை. சாமையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்து உள்ளது. சைவ உணவு மட்டும் உண்பவர்கள் புரதத்திற்காக தினமும் தங்கள் உணவில் சாமையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சாமையில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. சர்க்கரை நோயாளிகளும் இந்த சாமையை தைரியமாக சாப்பிடலாம். பல சத்துக்கள் நிறைந்த இந்த சாமையை வைத்து எப்படி சுவையான அதே சமயம் சத்தான சாமை கற்கண்டு பொங்கல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அரை கப் அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் நன்கு வறுக்க வேண்டும். பாசிப்பருப்பு சிவந்து வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பை நன்கு வறுத்த பிறகு பாசிப்பருப்புடன் ஒரு கப் அளவு சாமை அரிசியை சேர்த்து தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது தண்ணீரில் களைந்த பாசிப்பருப்பு மற்றும் சாமை அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான்கு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி விசில் போட வேண்டும் ஆறு விசில் வரை வேக விடவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் நெய் சூடானதும் 50 கிராம் அளவு முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது வேகவைத்த சாமை அரிசியில் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் முக்கால் கப் அளவு கற்கண்டு எடுத்து அதனை நன்றாக பொடித்து அந்த கற்கண்டு தோலையும் சேர்க்கவும்.
சிறிது நேரம் நன்கு கிளறிவிட்டு பிறகு வறுத்து எடுத்த முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்து சூடாக பரிமாறவும் தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்தும் வேக விடலாம் அது கூடுதல் சுவையோடு இருக்கும்.