விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்பட்டி மோதகம் செய்யலாமா?

By Sankar Velu

Published:

விநாயகர் சதுர்த்தி என்றாலே பல வகையான பழங்கள், லட்டு, கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் என படையல் பலமாக இருக்கும். அவற்றில் மிக மிக முக்கியமான ஒன்று தான் மோதகம். அதுவும் பிள்ளையார் பட்டி மோதகம் என்றால் ரொம்பவே பிரபலம். விநாயகர் தனது கையில் வைத்திருக்கும் இனிப்பான பலகாரம் இந்த மோதகம் தான். அதை வீட்டில் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா..!

தேவையான பொருள்கள்

பச்சரிசி – 1 டம்ளர்

பாசிப்பருப்பு – கால் டம்ளர்

தண்ணீர் – இரண்டரை கப்

நெய் – சிறிதளவு

தேங்காய் துருவல் – கால் கப்

ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

எப்படி செய்வது?

pacharisi
pacharisi+ pasiparuppu

பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நல்லா நீரில் அலசி ஊற வைங்க. அப்புறம் தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடுங்க. கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது தான் பதம். இப்போது அதை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு பரபரவென அரைத்துக்கொள்ளுங்கள்.

ரவை பதத்திற்கு அரைங்க. தொடர்ந்து அந்த மாவை கடாயை சூடுபண்ணி வறுத்து எடுங்க. இதை நல்லா உதிரியாக வரும் வரை வறுங்க. இதை ஒரு டப்பாவில் போட்டு முதலிலேயே தயார் செய்தும் வைக்கலாம்.

arisi maavu
arisi maavu

இப்போது காய்ந்து கொண்டு இருக்கும் மாவுடன் இரண்டரை கப் தண்ணீரை சேர்த்து கிளறிவிடுங்க. 1 டம்ளர் அரிசிக்கு 1 டம்ளர் வெல்லப்பாகு தயார் செய்யுங்க. இப்போ அரிசி மாவானது பசை பதத்திற்கு வந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளுங்க.

அதைத் தனியாக எடுத்து மூடி வைங்க. தண்ணீர் வற்றி ட்ரை ஆனதும் அதனுடன் தயாரித்து வைத்த வெல்லப்பாகை ஊற்றுங்க. இது சூடாக இருக்கும்போது கொஞ்சம் இளகிப்போய் தான் இருக்கும். ஆறியதும் நல்லா கெட்டியாகிவிடும். இப்போ அடுப்பை அணைத்து விடுங்க.

mothagam 1
mothagam 1

நல்லா ஆறியதும் உருண்டை பிடிக்கலாம். அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேருங்க. அப்புறம் கால் கப் தேங்காய் துருவலை மிக்சியில் பரபரவென அரைத்து அதனுடன் சேருங்க. அதனுடன் கொஞ்சமாக வாசனைக்காக நெய் சேருங்க. இரண்டையும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.

இப்போ சின்ன சின்ன உருண்டையாகப் பிடித்து கொழுக்கட்டையை இட்லி குக்கரி;ல் வைத்து வேக விடுங்க. இதை ஒரு 7 நமிடம் நல்லா வேகவிட்டு எடுத்துப் பாருங்க. அருமையா வெந்துவிடும். இதுதான் பிள்ளையார்பட்டி மோதகம். என்ன இந்த விநாயகர் சதுர்த்திக்கு செய்யறீங்களா?

Leave a Comment