விநாயகர் சதுர்த்திக்கு நம்ம வீட்டு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சாக்லேட் கொழுக்கட்டை செய்யலாமா?

Published:

பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே நாம் நம் வீடுகளில் இனிப்பு செய்வது மகிழ்வது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி என்றால் விநாயகருக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை செய்து விநாயகருக்கு படையெடுத்து வணங்குவதும் வழக்கம் தான். இந்த முறை புதிதாக நம் வீட்டு குட்டி குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் வைத்து கொழுக்கட்டை செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

நெய்- ½ டேபிள்ஸ்பூன்
இனிப்பு சேர்க்காத கோவா- 200 கிராம்
சர்க்கரை – ¼ கப்
கோக்கோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன் (விரும்பினால்)
பிஸ்தா – ⅛ கப் நறுக்கியது.

செய்முறை

முதலில் இந்த சாக்லேட் கொழுக்கட்டை தயார் செய்ய நாம் கோவாவை தயார் செய்ய வேண்டும். கோவா என்பது பால் இருந்து கிடைக்கும் மாவு மாதிரியான பொருள். ஒரு லிட்டர் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும், அதை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்து வரும் பொழுது அதை விடாமல் கிளறிக் கொண்டு இருக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பால் 200 கிராம் ஆக வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும், இப்பொழுது நமக்கு பால் நன்கு திரண்டு மாவு மாதிரியாக மாறிவிடும். இதுதான் கோவா இந்த மாவு வைத்து தான் சாக்லேட் கொழுக்கட்டை தயார் செய்ய முடியும்.

இப்போது ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும், அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும், நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் கோவாவை அதில் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அடுத்ததாக அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்

மிதமான தீயில் சர்க்கரை மற்றும் கோவா கலவையை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் அடுப்பை அணைத்து விடலாம்.இந்தக் கலவையில் கோக்கோ பவுடர், ஏலக்காய் தூள், பிஸ்தா இவற்றை அந்த சூட்டிலேயே கலந்து கிளற வேண்டும்.

இந்த கலவையில் சூடு தணியும் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின் கொழுக்கட்டை பிடிக்கும் அச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் உள் பக்கத்தில் சிறிதளவு நெய் தடவிக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவை அந்த அச்சில் வைத்து கொழுக்கட்டை தயார் செய்ய வேண்டும்.

இப்பொழுது வீட்டிலே எளிமையான முறையில் சாக்லேட் கொழுக்கட்டை தயார். குறிப்பாக நாம் சாக்லேட் மாவு கலக்கும் பொழுது கட்டிகள் விலாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கொழுக்கட்டை சுவையாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் கொழுக்கட்டை செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்

 

 

மேலும் உங்களுக்காக...