குழந்தைக்கு சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் ப்ரெட் மஞ்சூரியன் செய்து கொடுக்கலாமா…
ப்ரெட் மஞ்சூரியன் செய்ய தேவையான_பொருட்கள்:
பிரெட் – 6
தக்காளி – 2
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
குடை மிளகாய் – 1
சோள மாவு, மைதா – ஒரு தேக்க்கரண்டி
வெங்காயத்தாள் – சிறிதளவு
மிளகாய்த் தூள்/ பெப்பர் – ஒரு தேக்க்கரண்டி
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1. முதலில் தேவையான பிரெட் துண்டுகளை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
2. சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு ஆகியவற்றை தண்ணிர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தண்ணியாக கலக்க வேண்டாம்.
3. இந்த மாவில் ப்ரெட் துண்டுகளை முக்கி, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.
4. வெங்காயம், வெங்காயத்தாள், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும், குடை மிளகாயை சிறிது பெரிதாகவும், தக்காளியை அரைத்தும் வைத்து வைத்துக்கொள்ளவும்.
5. பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள்/பெப்பர், சோயா சாஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
யசோதா ட்ரெய்லரைப் பகிர்ந்து – ‘சமந்தாவை காதலித்தேன்’ என கூறிய மாஸ் ஹீரோ!