பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும் முடிந்தது! யாருலா கல்யாணத்துக்கு போனாங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் ஹரிஷ் கல்யாண், சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். 2010 ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

மேலும் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண்.இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

hariss

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கசட தபற’ திரைப்படத்தை தொடர்ந்து ஸ்டார், நூறு கோடி வானவில் போன்ற படங்களையும் தற்போது புதிதாக மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

இந்நிலையில் இன்று காலை ஹரிஷ் கல்யாண் – நர்மதா ஜோடிக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

கோதுமையில் சுவையான சத்தான கீர் செய்யலாமா? இதோ!

திருமணத்தில் நடிகைகள் அதுல்யா ரவி, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நேரில் சென்று ஹரீஷ் கல்யாணை வாழ்த்தினர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.