சுவையான தயிர் சாண்ட்விச்!!

சாண்ட்விச் வகைகளில் இன்று மிகவும் ஆரோக்கியமான உணவு வகையான தயிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: பிரெட் – 6  தயிர் – ஒரு கப் வெங்காயம் – 1 குடைமிளகாய்…

88886c0f1913335959d0ae1fee48d7ba

சாண்ட்விச் வகைகளில் இன்று மிகவும் ஆரோக்கியமான உணவு வகையான தயிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பிரெட் – 6 
தயிர் – ஒரு கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1/2
கேரட் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:
1.    பிரெட் துண்டுகளின் ஓரப் பகுதிகளை வெட்டி விடவும்.
2.    அடுத்து தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.  
3.    தயிருடன் வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 
4.    இதனை பிரெட் துண்டின் மேல் வைத்து மற்றொரு பிரெட் துண்டு மேல் வைக்கவும், இப்போது தயிர் சாண்ட்விச் ரெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன