நெய் மீன் குழம்பு ஹோட்டல்களில் அதிக அளவிலான நபர்களால் விரும்பி வாங்கிச் சாப்பிடும் வகையாகும். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நெய் மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1/4 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் கால் கப்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம்- 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து அரைத்த தேங்காய்ப் பால் கலவையைச் சேர்த்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.
6. குழம்பு கொதித்த பின்னர், கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் நெய் மீன் குழம்பு ரெடி.