நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்… சிக்கன் சூப் குடிக்கலாம் வாங்க…

By Velmurugan

Published:

சளி பிடித்திருக்கும் நேரங்களில் சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 250 கிராம்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

அரைத்து கொள்ளும் பொருள் :

சின்ன வெங்காயம் – 10

கொத்தமல்லி – 1/4 கப்

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – பெரிய துண்டு

பூண்டு – 4 பல்

தாளிக்க .

எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

கறிவேறிப்பிலை – சிறிதளவு

பெரிய வெங்காயம் – 1

செய்முறை:

* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும் .

* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி ,பூண்டு ,மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான வதக்கவும்

* அடுத்து அதில் கழுவிய சிக்கன் துண்டுகள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பேக்கரியில் வாங்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி நம்ம வீட்டுலையும்! ரெசிபி இதோ !

* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார். இதில் மல்லி தலை தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.

Leave a Comment