ஈவினிங் ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் செய்து கொடுத்து பாருங்க…

Published:

பள்ளி ,கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கணுமா… இந்த செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் செய்து கொடுத்து பாருங்க … வேண்டும் வேண்டும் என ஆசையா சாப்பிடுவாங்க..

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – ஒரு கப்

வெள்ளை உளுந்தம் – ஒன்றரை மேசைக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

பால் – கால் கப்

சீனி – ஒன்றரை கப்

செய்முறை :

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும்.அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்து சுத்தம் செய்து , மூழ்கும் அளவு தண்ணீரில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அரிசி உளுந்து ஊறியதும், அதனுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் காச்சிய பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு மிருதுவாகவும் இறுக்கமாகவும் இருக்கும்.

அடுத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் நேரடியாக ஊற்றவும். ஊற்றும்போது எண்ணெய் வெளியே வராமல் பார்த்து கொள்ளவும் . சிறிது நேரத்தில் மாவை ஊற்றியதும் எண்ணெய்யில் பொரிந்து அது பணியாரம்போல் உப்பி வரும்.

இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும். சிவக்க விடக்கூடாது. எண்ணெய் பதிலாக நெய் சேர்த்து செய்தால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும்.

இப்போது சுவையான செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம் தயார். இதனை சர்க்கரை பாகில் ஊறவிட்டும், தேங்காய்ப் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

மேலும் உங்களுக்காக...