புத்தாண்டு ஸ்பெஷலா கேக் சாப்பிட ஆசையா இருக்கும் ஆனால் சிலரால் இந்த நேரத்தில் முட்டை சேர்த்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும், அதனால் கேக் வேண்டாம் என இருப்பார்கள் . அவர்களுக்கான புது சுவையில் வீட்டிலேயே கேக் செய்யலாம் வாங்க.
ரவை மட்டும் வைத்து வீட்டிலேயே எக்லெஸ் கேக் செய்யலாம் வாங்க …
தேவையான பொருட்கள் :
ரவை – 2 கப்
ரூட்டி ப்ரூட்டி – 1/3 கப்
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1/3 கப்
வெனிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை :
அவனை ( OVEN ) 100 டிகிரி செண்டி கிரேடுக்கு பிரிஹிட் செய்யவும் . கேக் பானில் வெண்ணெய் தடவி சிறிதளவு மைதா தூவவும்.
ரவை , ஏலக்காய் தூள் , பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் உப்பு சக்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஸ்ப்புனால் நன்கு கலக்கவும்.
அதனுடன் தயிர் , எண்ணெய் , வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும் , குறிப்பாக இதில் கட்டி விழாமல் கலந்து எடுத்து கொள்ளவும். மேலும் தேவைப்பட்டால் பால் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
புத்தாண்டு ஸ்பெஷலா வீட்டிலேயே கப் கேக் செய்யலாமா வாங்க!
பிறகு ரூட்டி ப்ரூட்டி சேர்த்து கலக்கவும்.இந்த மாவை கேக் பவுலில் ஊற்றி 40 முதல் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் ,இப்போது சுவையான எக்லெஸ் கேக் தயார்.