புத்தாண்டு ஸ்பெஷலா வீட்டிலேயே கப் கேக் செய்யலாமா வாங்க!

புத்தாண்டு என்று சொன்னாலே நம்ம நினைவிற்கு வருவது இனிப்பு வகைகள் தான் , வருடத்தின் முதல் நாளை இனிப்புடன் தொடங்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக அமையும். அந்த வகையில் இந்த புத்தாண்டை நாம் வீட்டிலேயே கப் கேக் செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்

வெண்ணெய் – அரை கப்

சர்க்கரை – கால் கப்

வினிகர் – 1 தேக்கரண்டி

வனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி

மைதா – 1. 25 கப்

கோகோ பவுடர் – அரை கப்

பேக்கிங் பவுடர் – அரை கப்

பேக்கிங் சோடா – கால் கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாலில் வெண்ணெய் , வினிகர் வனிலா எசன்ஸ் , சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . அதனுடன் மைதா மாவு கோகோ பவுடர் , பேக்கிங் சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பால் கலவையுடன் கலந்து கொள்ளவும்.

குறிப்பாக இதில் கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

குக்கரில் சர்க்கரை அல்லது உப்பை அரை கப் கொட்டி அதில் ஒரு கடினமான தடடை வைத்து ரப்பர் போடாமல் மூடி போட்டு சூடு படுத்தவும். பின்சிரிய கப்புகளில் வெண்ணெய் தடவி கப் கேக் பேப்பர் வைத்து கொள்ளவும் .

தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!

அதனுடன் கலந்து வைத்திருந்த கலவையை ஊற்றவும் , பின் கப்களை குக்கரில் வைத்து பூட்டி 30 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு வெளியே எடுத்து திருப்பினால் கப் கேக் ரெடி. அதற்கு மேல் உங்களுக்கு பிடித்தமான கிரீம் போட்டு சுவைக்கலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.