சுறா புட்டுக்கு இணையாக சுவையில் ஐந்தே நிமிடத்தில் வாழைக்காய் புட்டு ரெடி !

Published:

வாழைக்காய் மட்டும் வீட்டுல இருக்கிறதா… ஐந்தே நிமிடத்தில் சத்தான வாழைக்காய் புட்டு ரெடி பண்ணி அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1

அரிசி மாவு – 1 கப்

தேங்காய் – 2 கப்

உப்பு – சிட்டிகை

சர்க்கரை – தேவையான அளவு

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

செய்முறை

முதலில் ஒரு வாழைக்காயை குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அரிசி மாவில் வெந்நீர் ஊற்றி, உப்பு , வேக வைத்த வாழைக்காயை சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு பிணைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, ஒரு பங்கு துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு சர்க்கரையை தூவி மூட வேண்டும் .

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

பின்பு புட்டு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும், 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி. இதனை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் அசத்தலாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment