குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்விட்களில் பர்ஃபியும் ஒன்று. நம் வீடுகளில் அதிகமாக தேங்காய் வைத்து பர்ஃபி செய்வது வழக்கம், இந்த முறை புதுசாக ஆப்பிள் வைத்து பர்ஃபி செய்து பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்.:
ஆப்பிள் – 2 ,
தேங்காய்த் துருவல் – ஒன்றரை கப்,
சர்க்கரை – அரை கப்,
சீவிய பிஸ்தா – ஒரு டேபிள்டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை ,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.
செய்முறை.:
முதலில் ஆப்பிளில் தோளி நிக்கி துருவிக்கொள்ளவும். அடுத்து கடாயில் சிறிதளவு நெய் விட்டு தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல் சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் உப்பு சேர்த்துக் கிளறி கொள்ளவும்.
பிறகு, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். இந்தக்கலவையை கைவிடாமல் கிளற வேண்டும் இல்லையென்றால் கட்டியாக மாறி விடும்.
இந்த கலவை சற்று இருக்கும் போது சிறிதளவு நெய் சேர்த்து கொள்ளலாம். இந்த நேரத்தில் இதில் ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்தால் வாசனையாக இருக்கும். இந்த கலவை பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி விடவும்.
குளிர்காலத்தில் தயிர் புளிக்க வில்லையா? சீக்கிரம் புளிக்க – 7 எளிய குறிப்புகள் இதோ…
ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பி கொள்ளவும் , அதன் மீது சீவிய பிஸ்தாவை தூவவும். ஆறியதும் துண்டுகளாக்கி கட் செய்து கொள்ளவும்.