கேஷ் ஆன் டெலிவரியில் ஏற்பட்ட சிக்கல்.. வேற லெவலில் யோசித்த ஜொமேட்டோ..!

Published:

முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமோட்டோ நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரியில் ஏற்படும் சில்லறை பிரச்சனையை தீர்க்க ஒரு புதிய வழிமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில் இதன் காரணமாக டெலிவரி செய்யும் நபர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜொமேட்டோ உணவு டெலிவரி நான் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி அந்த ஆப்ஷனை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தாங்கள் ஆர்டர் செய்த உணவை வாங்கி விட்டு அதன் பின் டெலிவரி செய்யும் நபரிடம் கேஷ் கொடுக்கும் வழக்கம் பலரிடம் இருந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த கேஷ் ஆன் டெலிவரியில் சில நடைமுறை சிக்கல்  இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக ரூ.530க்கு ஒருவர் ஆர்டர் செய்துவிட்டு 1000 ரூபாய் அல்லது 600 ரூபாய்  கொடுத்தால் டெலிவரிமேனிடம் சில்லறை இல்லை என்றால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. சில்லறையாக கொடுங்கள் என்று டெலிவரிமேனும், சில்லறை இல்லை நீங்கள் போய் மாற்றி விட்டு வாருங்கள் என்று வாடிக்கையாளரும் கூறுவதை அடுத்து பல இடங்களில் வாக்குவாதம் நடைபெறுகிறது என்பது தகவல் வெளியாகியுள்ளன.

இந்த பிரச்சனையை தீர்க்க ஜொமேட்டோ சிஇஓ ஒரு புதிய வழிமுறையை கடைப்பிடித்து உள்ளார். இதன்படி கேஷ் ஆன் டெலிவரியில் சில்லறை பிரச்சினை ஏற்படும் போது வாடிக்கையாளரின் வேலட்டில் அந்த பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் அடுத்த ஆர்டர் செய்யும் போது அந்த பணத்தை கழித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒருவர் 530 ரூபாய்க்கு ஆர்டர் செய்துவிட்டு 600 ரூபாய் கொடுத்தால் டெலிவரிமேனிடம் சில்லறை இல்லை என்றால் மீதம் 70 ரூபாயை டெலிவரிமேன் வாடிக்கையாளரின் வேலட் பகுதியில் இணைத்து விடுவார். அந்த 70 ரூபாயை வாடிக்கையாளர் அடுத்த ஆர்டர் செய்யும் போது கழித்துக் கொள்ளலாம் என்ற புதிய வழிமுறை நேற்று முதல் கடைபிடிக்கப்படுவதாக ஜொமேட்டோ சிஇஓ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரிமேன் இடையே எந்த விதமான பிரச்சினையும் வராது என்றும் சில்லறை பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...