ஜொமைட்டோவில் குவியும் ரூ.2000 நோட்டுக்கள்.. என்ன செய்யப்போகிறது நிர்வாகம்..!

Published:

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தவுடன் 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள் அந்த நோட்டை எப்படி மாற்றுவது என்று பல்வேறு யோசனைகளில் உள்ளனர்.

அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் டாஸ்மாக் கடைகள் பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டு வாங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எந்தவித ஆவணமும் இன்றி 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கியில் மாற்ற வேண்டுமென்றால் ஒருவர் ஒரு நாளைக்கு 20,000 மட்டுமே திரும்ப பெற முடியும். ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் அந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.

2000குறிப்பாக ஜொமைட்டோவில் அதிக அளவு 2000 ரூபாய் நோட்டு குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் போது ஆன்லைனிலேயே பணத்தை செலுத்துவது தான் இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது டெலிவரி மேனிடம் பணத்தை செலுத்தும் ஆப்ஷனை பலர் தேர்வு செய்வதாகும் அவ்வாறு தேர்வு செய்திருக்கும் 90% பேர் 2000 ரூபாய்தான் கொடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜொமைட்டோ நிர்வாகத்திற்கு 2000 ரூபாய் நோட்டு குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

2000 ரூபாய் நோட்டை வங்கி திரும்பப்பெறும் என்று கூறப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் திரும்பப் பெறும்போது அதற்கான கணக்குகளை கேட்கும் என்பதால் ஜொமேட்டோ நிர்வாகம் திணறி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜொமைட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மட்டுமின்றி நகை கடைகள் ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றில் 2000 ரூபாய் நோட்டு குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டை பதுக்கியவர்கள் நகைக்கடைகளில் நகைகள் வாங்கி 2000 ரூபாய் நோட்டை செலவு செய்வதாக கூறப்படுகிறது. அரசு எந்த திட்டம் போட்டாலும் அந்த திட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடித்து சமூக விரோதிகள் பயன்படுத்தும் போது அந்த ஓட்டைகளை அடைப்பதில் அரசும் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...