யூடியூபில் சேனல் திறந்து சிறப்பான வீடியோக்களை பதிவு செய்து, அதன் மூலம் வருமானம் பெறுவது இன்றைய காலத்தில் ஒரு நல்ல தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் சுமார் 4000 பேர் யூடியூப் உருவாக்குபவர்களாக உள்ளனர் என்றும், அவர்களது வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த துலசி என்ற கிராமத்தை அங்கு உள்ள மக்கள் “YouTube தலைநகரம்” என்று அழைத்து வருகின்றனர். காரணம், இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் யூடியூப் சேனல் தொடங்கி, அவரவர் வசதிக்கேற்ற வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். தங்கள் சொந்த உற்பத்தி தொகுப்புகளை பதிவு செய்வதுடன், கிராமத்தில் உள்ள பல்வேறு விஷயங்களைத் தங்களது YouTube சேனல் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வீடியோக்கள் ஏராளமான வரவேற்பைப் பெறுகின்றன, மேலும் கணிசமான அளவில் சந்தாதாரர்களும் உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாதமும் சுமார் 250 மில்லியன் மக்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்துகிறார்கள். இது நாட்டில் ஒரு முக்கியமான வருமான வாய்ப்பாக மாறியுள்ளது. குறிப்பாக, துலசி கிராமத்தில் YouTube வருமானத்தை நம்பியே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் மிக எளிதில் பதிவு செய்ய முடிகிறது என்றும் கூறப்படுகிறது.