டாப் டிரெண்டிங்கில் இருக்கும் Xiaomi Redmi K50i ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் மற்றும் விலை..!

Published:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான Xiaomi Redmi K50i என்ற மாடல் ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் ட்ரெண்டிங்கில் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த அளவுக்கு இந்த போன் பயனர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ரூ.30,000 விலை உள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Xiaomi Redmi K50i ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8100 5G பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 6.6-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போன், 64MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அதேபோல் 16MP சென்சார் செல்பி கேமிராவையும் கொண்டுள்ளது.

Xiaomi Redmi K50i ஸ்மார்ட்போன்,ஆண்ட்ராய்டு 12 உடன் MIUI 13 ஓஎஸ் உடன் இயங்குகிறது. மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5080mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கைரேகை சென்சார் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Redmi K50i இந்தியாவில் Amazon, Mi.com மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் EMI விருப்பங்கள் மூலமாகவும் இது கிடைக்கிறது. இதன் விலை 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.25,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.28,999 என்றும் விற்பனையாகிறது.

Xiaomi Redmi K50i இன் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:

* 6.6-இன்ச் முழு HD+ (1080 x 2460 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

* MediaTek Dimensity 8100 5G பிராஸசர்

* 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி அல்லது 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 64MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் கேமிரா

* 16MP சென்சார் செல்பி கேமிரா

* 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5080mAh பேட்டரி

* ஆண்ட்ராய்டு 12 உடன் MIUI 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

சக்திவாய்ந்த பிராஸசர், பெரிய டிஸ்ப்ளே மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த போன், மீடியம் பட்ஜெட் பயனர்களுக்கு ஒரு சிறந்த போன் ஆகும்.

 

மேலும் உங்களுக்காக...