நீங்கள் Xiaomi போன் வைத்திருக்கிறீர்களா? இந்த 10 நாட்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

Published:

மொபைல் போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Xiaomi நிறுவனம் ஜூன் 1 முதல் 10 வரை இலவசமாக மொபைல் போனில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக அறிவித்துள்ளது. மொபைல் போனில் பேட்டரி வேலை செய்யவில்லையா? டிஸ்ப்ளே சரியாக வேலை செய்யவில்லையா? மற்றும் எந்த விதமான குறைபாடுகள் இருந்தாலும் ஜூன் 1 முதல் 10 வரை இலவசமாக சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சியாமி ஃபோன்களை பயன்படுத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Xiaomi மொபைல் போன் வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைலின் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் குறித்து முழுமையாக ஆய்வு செய்யவும், பேட்டரி மாற்றுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு சலுகை விலையிலும், இலவசமாகவும் இந்த 10 நாட்களில் சேவை செய்கிறது.

எனவே உங்கள் Xiaomi மொபைபோனை அருகிலுள்ள Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகி சரி செய்து கொள்ளலாம். Xiaomi சேவை மையத்தின் தகவல்களை Xiaomiயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு உங்கள் மொபைல் போனை சோதனை செய்வதன் மூலம் உங்கள் ஃபோனில் ஏதேனும் சிக்கல்களை சாப்ட்வேர் அல்லது செயலி இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்கள் ஃபோனின் மென்பொருளை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கலாம். அதேபோல் உங்கள் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் பேட்டரி மாற்றியமைப்பதில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும் . இந்தியாவில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...