உலகின் முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் நேற்று மதியம் திடீரென முடங்கிய நிலையில், உலகம் முழுவதும் அதன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் எக்ஸ் பக்கம் முடங்கியதாகவும், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று மதியம் 3:15 முதல் உலகின் பல நாடுகளில் எக்ஸ் பக்கம் முடங்கியதாகவும், இந்தியாவிலும் ஏராளமான பயனாளர்கள் எக்ஸ் பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை என்றும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு 7:00 மணியளவில் மீண்டும் எக்ஸ் பக்கம் செயல் இழந்ததாகவும், ஒரே நாளில் இரண்டாவது முறையாக பெரிய பாதிப்புக்கு உள்ளானது எலான் மாஸ்க் மற்றும் அவரது குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய இரண்டாவது முடிவின்போது 56% பயனாளர்கள் சிக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இதுகுறித்து 2,600 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செயல் இழப்பு குறித்து எக்ஸ் பக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், எலான் மஸ்க் அவர்கள் தனது சமூக வலைதளத்தில், “இது ஒரு சர்வதேச சதி. எனக்கு எதிராக ஹேக்கர்கள் குழு அல்லது சில நாடுகள் ஈடுபட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் என்ற நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றியதிலிருந்து சில ஆண்டுகளில், அதை உலகின் முன்னணி சமூக வலைதளமாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இதனால், அதன் போட்டியாளர்களே இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்றுகூட பேசப்படுகிறது.