உலகம் முழுவதும் திடீரென முடங்கிய X.. என்ன ஆச்சு எலான் மஸ்க் நிறுவனத்திற்கு?

  உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான X, நேற்று திடீரென முடங்கியதாகவும், ஆயிரக்கணக்கான பயனர்கள் லாகின் மற்றும் செயலியில் சிக்கல்களை சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Downdetector இணையதளத்தின் படி,…

 

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான X, நேற்று திடீரென முடங்கியதாகவும், ஆயிரக்கணக்கான பயனர்கள் லாகின் மற்றும் செயலியில் சிக்கல்களை சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Downdetector இணையதளத்தின் படி, X சேவை நேற்று சுமார் மாலை 5:47 மணிக்கு முதன்முறையாக அறிவிக்கப்பட்டு, 6:30 மணியளவில் அதிகரித்து, 2000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த சமூக ஊடக தளத்தில் பிரச்சனைகளை சந்தித்தனர்.

மேலும், Downdetector கூற்றின்படி, சண்டிகார், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கட்டாக், பட்டனா, ஆக்ரா மற்றும் கெளஹத்தி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பயனர்கள் இந்த மைக்ரோபிளாக்கிங் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தும்போது சிக்கல்களை சந்தித்ததாக தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை 6:17 மணியளவில் X பிளாட்ஃபாரத்தில் ஏற்பட்ட தடை மேலும் அதிகரித்தது, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பயனர்கள் பலர் சமூக ஊடக தளத்தில் பிரச்சனைகளை சந்தித்தனர்.

X செயலியில் 47 சதவீத பயனர்கள் சிக்கல்களை தெரிவித்தனர், இதில் 33 சதவீதம் லாகின் பிரச்சனைகள், 20 சதவீதம் இணையதள பிரச்சனைகள் இருந்தன.

அமெரிக்காவில் மட்டும் 25,699 பயனர்கள் இந்த பிளாட்ஃபாரத்தில் சிக்கல்களை தெரிவித்தனர். இதில் 68 சதவீதம் லாகின் சிக்கல், 24 சதவீதம் செயலி சிக்கல் மற்றும் 8 சதவீதம் இணையதள சிக்கல் இருந்தது.

கனடாவில், மேலும் 2,230 பயனர்கள் நேற்று மாலை பிளாட்ஃபாரத்தில் சிக்கல்கள் இருப்பதாக இணையதள கண்காணிப்பு கருவி காட்டியது.

இது இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக X உலகளாவிய அளவில் பெரிய சேவை தடை ஏற்பட்டது.

X தனது பிளாட்ஃபாரத்தில் ஏற்பட்ட சேவை தடையை ஒப்புக்கொண்டது . எங்கள் தரவு மையத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, பிரச்சனையை சரி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று அறிக்கை வெளியிட்டது