விடைபெற்றார் உலகின் மிக அதிக வயது பெண்மணி..பாட்டிக்கு எத்தனை வயசு தெரியுமா?

அவசரமான இந்த உலகில் மருத்துவம் மற்றும் அறிவியலின் அசுர வளர்ச்சியால் நாளுக்கு நாள் மனிதர்களின் ஆயுட் காலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் அதிக உடல் பருமன், தீய பழக்கங்கள் என ஆளாகி…

Old age woman

அவசரமான இந்த உலகில் மருத்துவம் மற்றும் அறிவியலின் அசுர வளர்ச்சியால் நாளுக்கு நாள் மனிதர்களின் ஆயுட் காலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் அதிக உடல் பருமன், தீய பழக்கங்கள் என ஆளாகி இளம் வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட நோய்களும் வருகிறது. ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கையுடன் அதிகம் செலவிட்டனர்.

சத்தான உணவுகளை உண்டு உடலில் எந்த நோயும் வராமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பல ஆண்டுகள் வரை அவர்களால் ஆரோக்கியத்துடன் இருக்க முடிந்தது. அப்படி வாழ்ந்த ஒரு பெண்மணி உலகின் அதிக வயது கொண்டவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் பிறந்து ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த மரிய பிரான்சிஸ் மோரேரோ என்ற மூதாட்டி உலகின் அதிக வயது கொண்டவராக இருந்தார். 1907-ல் பிறந்த அவர் 117வயது வரை வாழ்ந்து 2024-ல் மறைந்திருக்கிறார். இவருக்கு 3 மகள்கள், 11 பேரக் குழந்தைகள், 13 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். பிரான்சிஸ் மோரோரோ தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் புளு உள்ளிட்டவற்றைக் கடந்திருக்கிறார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்.

இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..

கடந்த இரண்டு தசாப்தங்களை முதியோர் இல்லத்தில் கழித்த அவர் 2023-ல் உலகின் மிக வயது மூத்த பெண்மணி என கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டார். தனது மறைவு பற்றி குடும்பத்தினரிடம் மிக விரைவில் என்னுடைய பயணம் முடிவுக்கு வரும் என சொல்லியிருக்கிறார். மரணத்தை முன்கூட்டியே கணித்து தான் சொன்னவாறே மறைந்திருக்கிறார் பிரான்சிஸ் மோரோரோ.

இவருடைய மறைவுக்குப் பின் தற்போது ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கும் 116 வயது மூதாட்டியான டோமிகோ இடூகோ உலகின் அதிக வயதுடைய பெண்மணியாக ஜெரண்டாலஜி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் 1908-ல் பிறந்தவராவார்.