இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..

Published:

சினிமாத் துறையில் இப்போது மெட்டுக்குப் பாட்டு எழுதும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் 1960-70 களில் பாட்டுக்கு மெட்டு என்பதே பிரதானமாக இருந்தது. குறிப்பாக தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றோர் நடித்த காலகட்டங்களில் பாடலுடன் இசையும் சேர்ந்தே ஒலிக்கும் வகையில் பாட்டுக்கு மெட்டு என்பது தான் வழக்கத்தில் இருந்தது.

ஆனால் கண்ணதாசன், எம்.எஸ்.வி. ஆகியோரின் வருகைக்குப் பின் பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு ஆகிய இரு வழக்கங்களிலும் பாடல்கள் உருவானது. இரண்டிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் இசை பெரிதா, பாடல்கள் பெரிதா என போட்டி போட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல தேன் போன்ற பாடல்களை அளித்தனர் இந்த இரு ஆளுமைகளும்.

இப்படி கண்ணதாசன் எத்தனையோ காவியப் பாடல்களை எழுதியிருந்தாலும் அவருக்கு வந்த ஒரு சவால் தான் ஆங்கில டியூன் ஒன்றிற்கு பாட்டு எழுதுவது. பழம்பெரும் இயக்குநர் ஆர்.சுந்தரம் இயக்கத்தில் 1966-ல் ஜெய்சங்கர், விஜயலலிதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் தான் வல்லவன் ஒருவன். இப்படத்திற்கு இசை பழம்பெரும் இசையமைப்பாளர் வேதா. பாடல்கள் கண்ணதாசன். வேதாவின் இசையில் பெரும்பாலும் மேற்கத்திய பாணியின் தாக்கம் இருக்கும்.

தங்கமகன் படத்தின் போது ரஜினி செஞ்ச அந்த ஒரு காரியம்.. நிஜமாவே மனுஷன் தங்கமகன் தான்..

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒருபாடலுக்கு மேற்கத்திய ஆங்கில இசையைத் தழுவி டியூன் ஒன்றை கண்ணதாசனிடம் கொடுத்திருக்கிறார். இந்த டியூனானது Artie shaw என்ற அமெரிக்க இசையமைப்பாளர் Frenesi ஆல்பம் ஒன்றிலிருந்து சுட்டதாகும். இந்த இசையானது 1940களிலேயே மிகப் பிரபலமாக இருந்தது. இந்த இசையை சிறிய திருத்தங்கள் செய்து வேதா கண்ணதாசனிடம் கொடுக்க வெஸ்டர்ன் இசைக்கு கண்ணதாசன் எப்படி பாட்டெழுதப் போகிறார் என்று அனைவரும் யோசித்த வேளையில் டியூனைக் கேட்டு கேட்டு

பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..

என்று மளமளவென எழுத அனைவரும் ஆச்சயர்த்தில் உறைந்தனர். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில், விஜயலலிதாவின் அசத்தல் நடனத்தில் உருவான் இப்பாடல் அந்தக் காலத்திலேயே வெஸ்டர்ன் ஸ்டைலில் ரசிகர்களைக் கவர்ந்த பாடலாக விளங்கியது.

மேலும் உங்களுக்காக...